வழிப்போக்கருக்கு HiFi கொடுத்த கரடி- வைரல் வீடியோ

32
Advertisement

மலைப்பகுதிகளில் விளங்களுக்கு சாலைகளை கடந்துசெல்வது வழக்கமான ஒன்று.அது போன்ற சமயங்களில் வாகன ஓட்டிகள் அவைகளை இடைமறிக்காமல் வாகனத்தை சாலையில் நிறுத்தி ,அவைகள் கடந்துசெல்லும் வரை காத்திருப்பது விலங்குகள் மீதான அன்பை பிரதிபலிக்கிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சாலையை கடக்கும் கரடிக் கூட்டத்தில் இருந்த ஒரு கரடி காரில் வந்த ஒருவருக்கு ஹைஃபைகொடுத்து செல்கிறது.

வனப்பகுதில் சாலையை கடக்க முயன்ற கரடி கூட்டத்தை கவனிக்கும் வாகன ஓட்டிகள் நின்றுவிட, சாலையை கடந்து சென்ற கூட்டத்திலிருந்து ஒரு கரடி திடீரென அங்கிருந்த வாகன ஓட்டி ஒருவருக்கு  ஹைஃபை கொடுத்துவிட்டு சென்றது.

Advertisement

இதனை சாலையில் காத்திருந்த காரில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.