‘எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்’ இறந்த கணவரை இன்ஸ்டாவில் வாழ்த்திய வனிதா..

38
Advertisement

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் மரணம் அடைந்துள்ளார்.

கட்டுப்படுத்தாத குடிப்பழக்கத்தினால் ஏற்பட்ட பலவித உடல் உபாதைகளால் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட வனிதா, சில மாதங்களுக்குள்ளாகவே மனக்கசப்பினால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், பீட்டர் பாலின் இறப்பை அடுத்து, வனிதா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். நீயே உனக்கு உதவினால்தான் கடவுளும் உனக்கு உதவுவார் என்று தனது அம்மா அடிக்கடி தன்னிடம் சொல்வார் என்று பகிர்ந்துள்ளார். முக்கியமான முடிவெடுக்கும் நேரத்தில் எல்லாரும் அவரவர் பாதையை தேர்ந்தெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீங்கள் சந்தித்த துயரங்களுடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில் அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று வனிதா விஜயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பீட்டர் பாலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வனிதா நேரில் செல்வாரா என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், இன்ஸ்டா ஸ்டோரி மூலம் அவர் தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.