இந்த Test பண்ணா தெரிஞ்சுடும் எவ்ளோ நாள் வாழ்வோம்னு

469
Advertisement

ஒற்றைக் காலில் நின்று உடலை balance செய்ய முடிந்தால், அது உடல் சீராக இயங்கி ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி என்ற நம்பிக்கை பல காலமாக இருந்து வருகிறது. 

மேலும், 10 நொடிகளுக்கு ஒற்றை காலில் இயல்பாக நிற்க முடியாதவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ஏதோ ஒரு வகையில் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம் என நம்பப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற ஆய்வு ஒன்று இக்கூற்றுக்கு வலு சேர்த்துள்ளது.

British Journal Of Sports Medicine என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், சரியான காரணம் எப்படி என்று இன்னும் புலப்படாத நிலையில், ஒரு காலில் உடலை balance செய்ய முடியாதது, ஒருவரின் உடல் செயல்பாட்டில் உள்ள பல சிக்கல்களுக்கு பொதுவான அறிகுறியாக இருப்பது உறுதியாகி உள்ளது.  

இதனால் ஒருவரின் ஆயுள் காலம் குறைவதும் வெளிப்படுவதாக கூறும் மருத்துவர்கள், வயது, பாலினம் மற்றும் பிற முக்கிய காரணிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவில், ஒரு காலில் உடலை balance செய்ய முடியாதவர்கள் தங்கள் சராசரி ஆயுள் காலத்தை விட  முன்னதாக உயிரிழப்பதற்கு 84% வரை கூடுதல் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

மேலும், இத்தகைய எச்சரிக்கை மணியாக திகழும் balance testஐ வழக்கமான மருத்துவ பரிசோதனைகளில் சேர்க்க வேண்டும் என ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.