” இது என்னோட  விநாயகர்..விடமாட்டேன்.. ” குழந்தையின் பாசப்போராட்டம்

210
Advertisement

விநாயகர் சதுர்த்தி விழா  சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் , சிலை   நீரோட்டங்களில் கரைக்கப்பட்டது.பெரியவர்கள் எந்தளவு பத்தியாக இருந்தார்களோ ,குழந்தைகளும்  விநாயகர் சிலையை தன் வீட்டில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர்.

இதன் விளைவாக, வீட்டில் வைக்கப்பட்ட சிறு விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்ல விரும்பாத சிறுபிள்ளைகள் அடம்பிடிக்கும் பல வீடியோக்கள் உலா வரும்நிலையில் , மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், ஒரு குடும்பத்தினர் சிலையை வீட்டிலிருந்து வாகனத்தின்  கரைக்க கொண்டுசென்றபோது , அந்த வீட்டு  குழந்தை ,சிலையை கட்டிப்பிடித்துக்கொண்டு எடுத்துச்செல்ல விடாமல் அடம்பிடிக்கிறாள்.குழந்தையின் பெற்றோர் குழந்தையை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர் ,ஆனால் குழந்தை விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை,ஒருகட்டத்தில் விநாயகரின் மடியில் அமர்ந்துவிட்டது குழந்தை.பின் ஒருவழியாக குழந்தையை வலுக்கட்டாயமாக சிலையிடமிருந்து தூக்கிக்கொண்டார் அவரின் குழந்தையின்  அம்மா.