sathiyamweb
நடிகை மீனாவின் கணவர் மரணம்
பிரபல திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48) உடல்நலக் குறைவால் காலமானார்.
கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்கு சிகிச்சை பெற்ற வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
சென்னையில்,
பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை
டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
வணிக வளாகத்தின் மீது ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு; மக்கள் அலறியடித்து ஓடிய சிசிடிவி பதிவுகள் வெளியானது.
இலங்கையில் போக்குவரத்து முடக்கம்
இலங்கையில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடக்கம்; அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு என்பதால் பொதுப்போக்குவரத்தில் அலைமோதும் கூட்டம்.
சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் OPS
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு; பழனிசாமி தரப்பிற்கு எதிராக சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் பன்னீர்செல்வம்.
கோடநாடு வழக்கு
கோடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது; வழக்கை வாபஸ் பெறும்படி கனகராஜின் மனைவியை மிரட்டிய புகாரில் போலீஸார் நடவடிக்கை.
முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு; 3 மாவட்டங்களில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.
ஜியோ இயக்குநர் குழுவிலிருந்து முகேஷ் அம்பானி விலகல்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து விலகினார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி விலகிய நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக மகன் ஆகாஷ் அம்பானி நியமனம்.
பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ தாக்கல் செய்த அறிக்கையில்...
மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தொற்று உறுதியான 11 மருத்துவ மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை.
கொரோனா தடுப்பு நடவடிக்கை – மாநில அரசுகளுக்கு கடிதம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் வரும் மாதங்களில் பண்டிகை,...