ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத வகையில் 13 பெண் அமைச்சா்களை உள்ளடக்கிய அமைச்சரவை பதவி ஏற்பு

309

ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடா்ந்து, எதிர்க்கட்சியான லேபர் கட்சித் தலைவர் ஆன்டனி ஆல்பனேசி அந்நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், 11 நாள்களுக்குப் பிறகு அவரது தலைமையிலான அமைச்சரவை தலைநகா் கான்பெராவில் நடைபெற்றது.

கவர்னா்-ஜெனரல் டேவிட் ஹர்லே அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த அமைச்சரவையில், இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 13 பெண்கள் இடம் பெற்றுள்ளனா்.