ATM-ல் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட பணத்துடன் ஓட்டம் பிடித்த ஓட்டுநர்

atm
Advertisement

ஆந்திராவில் பிரபல தனியார் வங்கி ATM-ல் நிரப்புவதற்காக கொண்டுசெல்லப்பட்ட 50 லட்சம் ரூபாயுடன் வேன் ஓட்டுநர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள ICICI வங்கி ATM-ல் நிரப்புவதற்காக, 50 லட்சம் ரூபாய் பணத்துடம், நேற்றிரவு தனியார் ஏஜென்சிக்கு சொந்தமான வேன் சென்றது.

ATM மையத்தை வேன் அடைந்தவுடன், வேனில் இருந்த பாதுகாவலர் கீழே இறங்கினார்.

அப்போது வேன் ஓட்டுநர் போலைய்யா என்பவர், திடீரென்று, வேனை வேகமாக 50 லட்சம் ரூபாய் பணத்துடன் ஓட்டிச் சென்றுவிட்டார்.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர், ATM-ல் பணம் நிரப்புவதற்காக ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவன உரிமையாளருக்கு தகவல் அளித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ICICI வங்கி அதிகாரிகள், நெல்லூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து, 50 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்ற ஓட்டுநர் போலைய்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.