கொள்ளையடிக்க சென்றபோது ATM-ல் சிக்கிக்கொண்ட திருடன்

352
Advertisement

மோகனூர் பகுதியில் போலீசார் நோந்து பணியில் இருந்தபோது, அணியாபுரம் அருகேயுள்ள ATM மையத்தில் ஒருவர் சிக்கி கொண்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட ATM மையத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது இளைஞர் ஒருவர் ATM இயந்திரத்தில் சிக்கியுள்ளார்.

அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், கொள்ளையில் ஈடுபட்டது பீகார் மாநிலத்தை சேர்ந்த உபேந்திர ராய் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement

மோகனூர் அருகேயுள்ள கோழிப்பணையில் வேலை பார்த்துள்ளார்

மேலும், பணம் எடுப்பதற்காக ATM மையத்திற்கு உபேந்திர ராய் சென்றபோது ஆட்கள் இல்லாததால் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக உபேந்திராவின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.