பசிபிக்யை தனியாக கடந்து  83 வயது முதியவர் சாதனை 

200
Advertisement

சாதிக்க வயது  தடையில்லை என்பார்கள்,இதனை பலரும் பல சாதனைகளை செய்து நிரூபித்தும் உள்ளனர்.இந்த வரிசையில்  ஜப்பானை சேர்ந்த 83 வயதான முதியவர் ஒருவரும்  இணைந்துள்ளார்.

 கெனிச்சி ஹோரி என்ற அந்த முதியவர்,  மார்ச் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு படகு துறைமுகத்திலிருந்து புறப்பிட்டு, 69 நாட்களில் தனது டிரான்ஸ்-பசிபிக் பயணத்தை முடித்து, ஜப்பானின் மேற்கு கடற்கரையில் உள்ள கிய் ஜலசந்தியை வந்தடைந்தார்.

இதன்மூலம்  பசிபிக் கடலை  தனியாக இடைவிடாது கடந்த  உலகின் வயதான நபரானார்.முன்னதாக,1974 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பயணம் செய்தல் உட்பட பல நீண்ட தூர தனிப் பயணங்களையும் ஹோரி சாதித்துள்ளார். ஹவாயில் இருந்து கிய் ஜலசந்தி வரை அலையால் இயங்கும் படகில் 2008 ஆம் ஆண்டு தனியாக பயணித்ததே இவரின் முதல் முறையாகும்.

“நான் இறுதிக் கோட்டைத் தாண்டிவிட்டேன். நான் சோர்வாக இருக்கிறேன், ”என்று அவர்  ஜப்பானை அடைந்த பிறகு தனது வலைப்பதிவில் வெற்றியை பகிர்ந்துள்ளார்.