தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், 6 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

184

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், 6 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 35 ஆயிரத்து 670 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 2 ஆயிரத்து 33 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 466 பேரும், செங்கல்பட்டில் 217 பேரும், கோவையில் 187 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அரியலுார், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.