கர்நாடகாவில் மேலும் 24 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள், இன்று முற்பகல் 11.45 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர்….

175
Advertisement

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் கடந்த வாரம் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால் அவர்களுக்கு துறைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று இரவு 24 அமைச்சர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. அதில்,, காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. லிங்காயத் சமூகத்தை சேர்ந்த 6 பேர், ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த 4 பேர், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த இருவர் உட்பட பட்டியலினத்தை சேர்ந்த 5 பேர் என 24 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

லக்ஷ்மி ஹெப்பால்கர் என்ற ஒரு பெண்ணின் பெயர் மட்டும் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் அனைவரும் இன்று முற்பகல் 11.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர். பதவியேற்புக்கு பிறகு, அவர்களுக்கான துறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.