ஜெ. மரணம் – அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்

178

தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையம், அறிக்கை தாக்கல் செய்ய, மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அப்போலோ மருத்துவர்கள் உள்ளிட்ட 160 நபர்களிடம் விசாரணையை நடத்தியது.

ஆறுமுகசாமி ஆணையம் ஜூன் 24ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

13வது முறையாக கால நீட்டிப்பு கோரியுள்ள ஆறுமுகசாமி ஆணையம், ஜூலை வரை கால நீட்டிப்பு வழங்க என்று வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை 3.63 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.