அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

304
Advertisement

அருகம்புல் சாறு உடலை டீடாக்ஸ் செய்வதோடு உடலுக்குச் சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.

வாயுத்தொல்லை, அஜீரணக் கோளாறு போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை கொண்டது.
ஒரு கைப்பிடி அளவு அருகம்புல்லை நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு, அதனுடன் அரை கேரட் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதை நன்கு மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி சாறெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறில் தேன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர, குடலில் உள்ள கழிவுகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு, தொப்பை குறைவதோடு ஓரிரு வாரங்களிலேயே உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.