சர்ச்சை பேச்சு – மீண்டும் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர்

327

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கேரள காங்கிரஸ் தலைவர் பி.சி ஜார்ஜ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், இஸ்லாமியர்கள் நடத்தும் உணவு விடுதிகள் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, அவருக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

அவர் பேசிய கருத்துகள் வெறுப்புணர்வு மற்றும்  மதவெறியை தூண்டும் வகையில் இருப்பதாக நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவரை 14 நாட்கள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கெனவே ஒருமுறை அவர் கைது செய்யப்பட்ட நிலையில் இப்போது இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.