கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

173

மாங்காடு அருகே கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே கோவூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் ராஜி தலைமையிலான போலீசார் கஞ்சா விற்பனை செய்த வந்த  மணி, சிலம்பரசன் என்ற இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

விசாரணையில் ஆந்திராவில் இருந்து ஆட்டோ மூலம் கஞ்சா கடத்தி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா, ஆட்டோ மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.