பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தற்காலிக செவிலியர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அவர்களை போலீசார் குண்டு கட்டாக இழுத்து சென்று கைது செய்தனர்.