ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு – புதிய நடைமுறைகளை பின்பற்ற முடிவு

356

மத்தியஅரசின் புதிய முடிவுப்படி, பதினேழரை வயதிலிருந்து 21 வயது வரையிலான இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

அவர்களுக்கு மாத ஊதியமாக 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் இதரப் படிகளும் வழங்கப்படும்.

நான்கு ஆண்டுகள் மட்டுமே அவர்கள் பணியிலிருப்பார்கள்.

அவர்கள் பதக்கங்கள், விருதுகள் பெறவும் காப்பீட்டு வசதி பெறவும் வழி செய்யப்படும்.

தேர்வு செய்யப்பட்ட 45 ஆயிரம் வீரர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் வழக்கம்போல் 15 ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

தகுதி, திறமை, விருப்பம், மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நான்கு ஆண்டுகள் பணி முடித்து திரும்புகிறவர்களுக்கு 12 லட்சம் ரூபாய்வரை நிதியுதவியும் தொழி் தொடங்க கடனுதவியும் வழங்கப்படும்.

இந்தப் புதிய திட்டத்தின்மூலம் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் மீதமாகும்.

இந்தத் தொகை ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.