“ஹேர் ஸ்டைல் பண்றேன்னு முடிய எருச்சுடானுங்க”-இராணுவ அதிகாரியின் மனைவி புகார்

712
Advertisement

தலைமுறைக்கு ஏற்றதுபோல் நாம்பளும் ஹேர் ஸ்டைலியை மாத்திக்கணும் என, முதலில் கைக்கு வந்தபடி எல்லாம் முடியை வெட்டிவிட்டு, அதற்கு ஒரு பெயர் வைத்து விடுகின்றனர்.

இது போதாது என்று பெயர் தெரியாத கிரீம்களை போடுவது, முடிக்கு தீ வைப்பது போன்ற வேலைகளையும் ஈடுபட்டு வருகின்றனர்.இளைஞர்களை ஈர்த்த இதுபோன்ற ஹேர் ஸ்டைலிற்கு பசங்க மட்டும் அல்ல பெண்களும் தான்.

இந்நிலையில் , மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இராணுவ அதிகாரியின் மனைவி தனது முடி சிகிச்சைக்காக நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான சலூனுக்கு சென்றுள்ளார்.

போன இடத்தில சலூன் ஊழியர்கள் கூந்தல் சிகிச்சையின் போது ஏதோ ரசாயனத்தை பயன்படுத்தியதாகவும், இதனால் தனது தலைமுடி சேதமடைந்துள்ளதாகவும் அந்த பெண் விஜய் நகர்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட சலூன் உரிமையாளர் ,மேலாளர், மற்றும் ஊழியர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.