கைக்குழந்தைக்கு உணவளித்த இராணுவ அதிகாரி

282
Advertisement

இராணுவ வீரர்கள் என்ற பெயரை கேட்குப்போதே நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும்.இந்நிலையில் இராணுவ வீரரின் செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அதில் “உணர்ச்சிகளும் கடமையும் கைகோர்க்கும்போது. ஹேட்ஸ் ஆஃப் இந்தியன் ஆர்மி” என்று பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்த புகைப்படத்தில், ஆம்புலன்ஸின் உள்ளே ராணுவ அதிகாரி ஒருவர் குழந்தைக்கு உணவளிப்பது போன்று உள்ளது.நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், மற்றொரு இராணுவ அதிகாரியும் கையில் துணியுடன் குழந்தையின் அருகே நிற்கிறார்.மனதைக் கவரும் இந்த புகைப்படம் நெட்டிசன்களின் இதயத்தை தொட்டுள்ளது.