வரும் 31ஆம் தேதிக்குள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கெடு விதித்துள்ளார்…

22
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பா.ம.க 2.0 விளக்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் 80 சதவீதம் வேலைகளை, தமிழர்களுக்கு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார். சாதாரண மக்கள் நீர் நிலையில் வீடு கட்டக்கூடாது என்றும், ஆனால் தொழிற்சாலைகள் கட்டலாம் என்று, தமிழக அரசு சிறப்பு சட்டத்தை இயற்றியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இந்த சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வரும் 31ஆம் தேதிக்குள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கெடு விதித்துள்ளார்.