அமெரிக்க வெளியுறவு அமைச்சர் – பிரதமர் இன்று சந்திப்பு

598
modi
Advertisement

இந்தியா வந்துள்ள அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார்.

இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் நேற்று மாலை இந்தியா வந்தார்.

டெல்லியில் வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை இன்று சந்தித்து பேச உள்ளார்.

அப்போது, இந்தியா – அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம், இந்தோ – பசிபிக் கூட்டுறவை விரிவுபடுத்துவது உள்ளிட்டவை குறித்தும், இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Advertisement

முன்னதாக ஆண்டனி பிளின்கான், பிரதமர் மோடியையும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.