செவனேனே போன முதியவரை அந்தரத்தில் பறக்கவிட்ட “காளை”

306
Advertisement

காளைக்கு கோபம் வந்தால் எதிரே யாரும் நிற்கமுடியாது.அவை தாக்குதல் மிகவும் ஆபத்தானது.அது எந்த அளவு என்றால் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்த்தால் தெரியும்.தன் எதிரே வழியை மறைத்து நிற்பவர்களை தூக்கிபோட்டு பந்தாடும்,சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்பட்டுவிடும்.

இந்நிலையில் இணையத்தில் பகிரப்பட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில்,காளை மாடு ஒன்று தெருவில் ஆக்ரோஷமாக நடமாடிகிறது.காளை கோபத்துடன் இருப்பதை அறிந்த ஒரு வீட்டின் உரிமையாளர் , காளையின் மீது தண்ணீர் ஊற்றுகிறார்.

ஆனால் , அந்த காளை சாந்தம் அடைந்ததாக தெரியவில்லை.அதேவேளையில் அந்த தெருவில் முதியவர் ஒருவர் சைக்கிளில் வருகிறார்.சரியாக காளையின் அருகே வரும் முதியவரை கவனித்த காளை,அவரை நோக்கி சென்று தாக்கியது, ஒரு கட்டத்தில் சைக்கிள் உடன் முதியவரை அந்தரத்தில் தூக்கி வீசியது.

காணொளில் பார்க்கும்போதே அச்சமூட்டும் வகையில் இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.