சாலையில் சிதறிய பீர் பாட்டில் – அள்ளிச் சென்ற குடிமகன்கள்

416
Advertisement

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு பீர் பாட்டில்கள் ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு லாரி சென்றுக்கொண்டிருந்தது.

சிங்கரயகொண்டா தேசிய நெடுஞ்சாலையில், வந்தபோது திடீரென
ஓட்டுநரைன் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பீர் பாட்டில்கள் அனைத்தும் சாலையில் சிதறியது.

இந்த தகவலை அறிந்த குடிமகன்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் சாலையில் சிதறிக்கிடந்த பீர் பாட்டில்களை போட்டி போட்டு அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.