மேடையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரைக்கொடுக்கும் கலைஞர்கள்- தொடரும் சோகம்.. !

274
Advertisement

சமீப நாட்களாக நாட்டில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.ஆம்… மேடை கலைஞர்கள் மேடையில் நடித்துக்கொண்டு இருக்கும்போது , மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது தொடர்கதையாகிவிட்டது.

இந்த வரிசையில், ஜம்முவில் “கணேஷ் உற்சவம்” நிகழ்ச்சி ஒன்றில் 20 வயதான யோகேஷ் குப்தா என்ற இளைஞர், பார்வதி தேவி வேடமிட்டு நடனமாடிக்கொண்டு இருந்தபோது, ஒரு கட்டத்தில், மேடையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பிறந்தநாள் விழாவில் நடனமாடிய 48 வயது நபர் உயிரிழந்தார்.மற்றொரு சம்பவத்தில் உ.பி யில் விநாயக சதுர்த்தி நிகழ்ச்சியில் அனுமன் வேடமிட்டு நடித்துகொண்டுருந்த போதே தன் உயிரை விட்டார் மேடை கலைஞர் ஒருவர்.