பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

117

வேலை நிறுத்தம் அறிவித்துள்ள தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் உடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை கண்டித்து தனியார் பள்ளிகள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், இதனால் தனியார் பள்ளிகள் இயங்காது என்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement