ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அசத்தல் ட்விட்

230
Advertisement

ட்விட்டரில், மக்களுக்கு ஊக்கமளிக்கும் பதிவுகளை பகிர்வது ஆனந்த் மஹிந்திராவின் வழக்கம்.சமீபத்தில் அவர் பகிர்ந்த மற்றொரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘நம்பகமான முன்கணிப்பு பொறிமுறை’ பற்றிய அவரது பதிவிற்கு பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“காலநிலை மாற்றத்தால் வானிலை நிலையை  கணிக்க முடியாத வகையில், இதுவே எதிர்காலத்திற்கான ஒரே நம்பகமான முன்கணிப்பு பொறிமுறையாக இருக்கலாம்…” என்று ஆனந்த் மஹிந்திரா ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

மேலும், ஒரு படத்தையும் பதிவிட்டுள்ளார். “வானிலை நிலையம்” என்று தலைப்பிடப்பட்ட பலகையில் தேங்காய் தொங்குவதை படம் காட்டுகிறது. தென்னையின் பல்வேறு நிலைகள் வெவ்வேறு காலநிலைகளை எவ்வாறு தெரிவிக்கின்றன என்பதையும் பலகை சித்தரிக்கிறது.

சிலர்  மஹிந்திராவுடன்  உடன்பட்டாலும், இன்னும் சிலர் வேடிக்கையாக  தங்கள் சொந்த கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.