பெரம்பலூர்  அருகே நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு இரும்பு கம்பியால் ஒருவரை தாக்கி கொள்ளையர்கள் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

18
Advertisement

பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.

மர ஆசாரி வேலை செய்துவரும் ரவிச்சந்திரன் அவரது மனைவி கனகவள்ளி இருவரும் வீட்டை பூட்டி விட்டு புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில், ரவிச்சந்திரனின் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வெளியே மின்விளக்கை அணைக்க சென்றுள்ளார்.

அப்போது, வீட்டிற்குள் இருந்து திடீரென வந்த மர்மநபர்கள் 2 பேர் கேட்டை பூட்ட முயன்ற ராஜசேகர் என்பவரை இரும்பு கம்பியால் தாக்கியும், கத்தியை காட்டி மிரட்டியும் தப்பி சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டில் சென்று பார்த்த போது 16 சவரன் தங்கநகை மற்றும் ரொக்கபணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.