ரஷ்யா அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விட்ட அமெரிக்கா

81

உக்ரைன் உடனான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், பேரழிவு விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், உக்ரைன் மீதான போரில், ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும் என எச்சரித்தார்.

அமெரிக்கா ரஷ்யாவிற்கு சரியான பதிலடி கொடுக்கும் எனவும் தெரிவித்தார். ஐ.நாவின் 77வது பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக புதின் வெளிப்படையான அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டிய நிலையில், உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது