2 படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து

310

அமெரிக்காவில் 3 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி,  ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த மக்கள் வில்மிங்டன் ஆற்றில் படகு சவாரி செய்ய அதிகளவில் குவிந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் 2 படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 படகுகளிலும் பயணம் செய்த 9 பேர் நீரில் மூழ்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல்படையினர் 5 பேரை சடலமாக மீட்டனர்.

4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இதற்கிடையே இல்லினாய்ஸ் மாகாணத்தின் செனிகா நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த படகின் என்ஜின் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

இதில் படகு தீப்பற்றி எரிந்து ஆற்றில் மூழ்கியது.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

படுகாயமடைந்த 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.