நீட் தேர்வில் மருத்துவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு – பல்வேறு மாநிலங்களில் சிபிஐ விசாரணை

41

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மருத்துவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் சிபிஐ விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள பல மையங்களில் தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதுவதாக சி.பி.ஐ.,க்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்த விசாரணையை சிபிஐ கையில் எடுத்துள்ளது. இதில், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதியதாகவும், ஒரு சீட்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக சிபிஐ அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நீட் ஆள்மாறாட்டத்தில், மருத்துவர்களும், சில பயிற்சி நிறுவனங்களும் ஈடுபட்டதாக சிபிஐ தெரிவித்துள்ள நிலையில், பீகார், உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் விசாரணை
விரிவுபடுத்தப்பட்டுள்ளது.