பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் , வேதியியல் கட்டாயமில்லை – ஏஐசிடிஇ

386
Advertisement

பொறியியல் படிக்க 2022-2023 ம் கல்வியாண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில், பொறியியல் பிரிவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேர கணிதம் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது.

இளங்கலை கட்டடக்கலை படிப்பிற்கு 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. கணினி அறிவியல்(CSE), மின்(EEE) மற்றும் மின்னணு பொறியியல் படிப்புகளில் சேர 12-ம் வகுப்பில் வேதியியல் பாடம் படித்திருப்பது கட்டாயமில்லை எனவும் அகில இந்திய தொழில்நுட்பக்குழு அறிவித்துள்ளது.

இதே போன்று, பேஷன் டெக்னாலஜி மற்றும் பேக்கேஜிங் டெக்னாலஜி,  உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் ஆகிய படிப்புகளுக்கும் 12 -ம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்பக்குழு தெரிவித்துள்ளது.

ஏஐசிடிஇ-யின் புதிய விதிகளின் படி, மூன்றில் ஒரு பங்கு பொறியியல் பாடங்களைப் படிக்க 12-ம் வகுப்பில் கணிதம் படிக்க வேண்டிய அவசியமில்லை. இதே போன்று,  கொரோனாவால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்காக 2022-23-ம் கல்வியாண்டில் அனைத்து பாலிடெக்னிக் பாடப்பிரிவுகளிலும் 2 இடங்கள் ஒதுக்கப்படும் எனவும், இதனால் பிற மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.