தலையில்லா முண்டம்போல் அதிமுக உள்ளது – டிடிவி தினகரன்

18

தலையில்லாமல், முண்டம்போல் இருக்கும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னமும் செயல்படாமல் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தற்போது செயல்படாத இயக்கமாக உள்ளது என்றும் 4 மாதத்திற்குள் பொதுச்செயலாளர் தேர்தல் வைக்காததால், எடப்பாடி பழனிசாமி, தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என்று சொல்வது தவறு என கூறினார்.

அதிமுக-வை அழிக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் செயல்படுகிறார் என்று கூறிய டிடிவி தினகரன், ஒரு கட்சியின் எதிர்காலமே நீதிமன்றத்தின் கையில் இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என குற்றம் சாட்டினார். வாய்ப்பு கிடைக்கும்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Advertisement