தூத்துக்குடியில் VAO படுகொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்…

77
Advertisement

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை வெட்டி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதை சுட்டிக்காட்டி, சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தொடர்ந்து இந்த அரசை எச்சரித்து வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த அரசு பாராமுகமாய் இருப்பது மட்டுமில்லாமல், மக்கள் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் எந்த அக்கறையும் இன்றி இருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால், பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். நாடக அரசியலை மட்டுமே கவனம் செலுத்தும் இந்த அரசின் முதலமைச்சர் இனியாவது சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.