அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது…

26
Advertisement

 அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்  ஏப்ரல் 7-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7-ந் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 7ந் தேதி செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இது அதிமுகவில் சலசப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடகா தேர்தல், மக்களவை தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.