Sunday, December 28, 2025

“திமுக மீது உள்ள பயத்தால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி” – கனிமொழி விமர்சனம்

திமுக கூட்டணி மீது அச்சம் இருப்பதால் தான், பாஜக.வுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்துள்ளதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக முகவர்கள் கூட்டம், KTC நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

நமது மொழியை ஒழித்து தமிழகத்தின் உரிமைகளை பறித்து விட வேண்டும் எனவும், வரலாற்றில் தமிழை மறைத்து விட வேண்டும் என மத்திய பாஜக அரசை சாடினார். மேலும் பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கூறிவிட்டு, அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததான் காரணம், திமுக மீது உள்ள பயம் என கூறினார்.

Related News

Latest News