“காய்கறி, கீரை சாகுபடி செய்ய மானியம்”

166
garden
Advertisement

அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும், 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ள மானியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டம் 95 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர், மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் கொண்ட தளைகள் 2 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த 2 ஆயிரத்து 327 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Advertisement