உயர் திறன் சூரிய மின்சக்தி மின்சார உற்பத்தி திட்டத்துக்கு, 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, ஆண்டுக்கு 65 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது, 1.95 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 7.88 லட்சம் பேருக்கும் மறைமுகமாக வேலை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் அடுத்த 5 ஆண்டுகளில், ‘செமி கண்டக்டர்’ எனப்படும் மின்னணு உபகரண உற்பத்தியில், 76 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது