அக்னிபத் திட்டம் – காலப்போக்கில் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் – பிரதமர்

132

அக்னிபத் திட்டம் காலப்போக்கில், தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

வடமாநிலங்கள் வன்முறைகள் வெடித்து, ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன.

Advertisement

அக்னிபத் திட்டம், ஆபத்தானது என்று எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சில முடிவுகள் தற்போது நியாயமற்றதாக தெரியும்.

ஆனால் காலப்போக்கில், அந்த முடிவுகள் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்று தெரிவித்தார்.