அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

20

ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில், EPS அணியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஓ.பன்னீர் செல்வத்தை கழக பொதுச்செயலாளர் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனி, எடப்பாடி பழனிசாமியை புகழ்வதற்காக அடைமொழிகளை அள்ளிவீசிய அவர், தவறுதலாக ஓ.பன்னீர் செல்வத்தை கழக பொதுச்செயலாளர் என கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மன்னிப்பு கேட்டு, எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்ததால், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.