‘குரங்கு காய்ச்சல்’ எச்சரித்த உலக சுகாதார அமைப்பு- மீண்டும் கட்டுப்பாடுகள் ?

241
Advertisement

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அடுத்து  இஸ்ரேலுக்கும் பரவியது  ‘குரங்கு காய்ச்சல்’.காய்ச்சல், தசைவலி,தோளில் தடிப்புகள் மற்றும் சோர்வு ஆகியவை குரங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும்.இது பொதுவாக இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதம் வரை நீடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 30 வயதான ஒருவருக்கு குரங்கு காச்சல் அறிகுறிகள் இருந்ததால்,அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அந்த நபர் குரங்கு காச்சலால் பாதிக்கப்பட்டுருப்பது தெரிவந்துள்ளது,இதுவே அந்நாட்டில் பதிவான முதல் வழக்காகும் என இஸ்ரேல் அரசு தெரிவித்து உள்ளது.

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட குறைந்தது 12 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் மக்கள் கூடும் கூட்டம், திருவிழாக்கள் மற்றும் விருந்துகளால் குரங்கு பாக்ஸ் வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு  எச்சரித்துள்ள நிலையில்,இது குறித்து விவாதிக்க அவசர ஆலோசனை கூட்டத்தையும் நடத்தவுள்ளது.உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையால் இந்திய விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.