ஆப்கன் விவகாரம் – 24-ஆம் தேதி சிறப்பு கூட்டம்

afghanistan issue
Advertisement

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்பு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆப்கனில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement