பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடியே திரையில் வர வேண்டும்

305

13. பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடியே திரையில் வர வேண்டும்

ஆப்கானிஸ்தான் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பர்தாவால் மூடப்பட்ட முகத்துடன், திரையில் வர வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அதன்படி, ஆப்கானிஸ்தான் செய்தி சேனல்களில் பணி புரியும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் இனி பர்தாவால் மூடப்பட்ட முகத்துடன் திரையில் வர வேண்டும் என தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது, தங்கள் முகம் உட்பட முழு உடலை மறைக்கும் வகையிலான பாரம்பரிய பர்தா உடையை அணிய வேண்டும் என்று ஆப்கன் அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை ஏற்று தற்போது ஆப்கானிஸ்தான் செய்தி சேனல்களில், திரையில் தோன்றும் பெண்கள் முகங்களை மூடிக்கொண்டே செய்தி வாசிப்பிலும், தொகுத்து வழங்குவதிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு அங்குள்ள பெண் செய்தி வாசிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.