ஆப்கன் விவகாரம் – நாளை ஆலோசனைக்கூட்டம்

afghanistan
Advertisement

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 21 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் சுதந்திரம், கல்வி, வேலை உரிமைகள் குறித்து கவலையாக உள்ளது என்று அந்நாட்டு அரசுகள் தெரிவித்தன.

அதே சமயம் தாலிபான் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கான உரிமைகளை வழங்க தாலிபான் உறுதி பூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த ஜி-7 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

Advertisement