ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி.
மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகின.
அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாகவும் சொல்லப்பட்டது. க
ஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இதற்கிடையே, அதிபர் அஷ்ரப் கனி மற்றும் ஆப்கானிஸ்தானின் பிற தலைவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகின.
ஆனால், உஸ்பெகிஸ்தான் நாடும் அஷ்ரப் கனி தங்கள் நாட்டில் இல்லை என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அஷ்ரப் கனி தற்போது ஓமன் நாட்டில் இருப்பதாகவும் அவர் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.