“பாஜகவால் தமிழகத்துக்கு எந்த நலனும் இல்லை”

91

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், பாஜகவைப் பொறுத்தவரை தமிழக நலனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதே இல்லை, காவிரிநீர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடக்கூடியது என்று குற்றம்சாட்டினார்.

அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்தில் பாஜக அமர முயற்சிப்பதாகவும் பாஜகவின் உண்மை முகத்தை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்தி பிரசாரம் செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொன்னையனின் இந்தக் கருத்து அதிமுக மற்றும் பாஜக வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement