மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

30
Advertisement

மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Advertisement

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக நடத்தப்படும் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் என்பதால், ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் சென்னை புறநகரை சேர்ந்த 9 மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கற்க உள்ளதால், மாவட்ட ஆட்சியல் அலுவலக பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.