தஞ்சையில் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்த அ.தி.மு.க  நிர்வாகி

295
Advertisement

தஞ்சையில் நீர்வளத்துறையின் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து அ.தி.மு.க  நிர்வாகி சாலை அமைப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் பகுதியில்  மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து, அப்பகுதி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் தனது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக சாலை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மழைநீர் வடியாமல் விளை நிலைங்களில் தண்ணீர் புகும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை தடுத்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.