அதிமுக கூட்டத்தில் OPS-EPS ஆதரவாளர்கள் மோதல்

147

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்த மோதலில் 5 பேருக்கு மண்டை உடைந்தது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றைத்தலைமையை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திடீரென புகுந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினரும் பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த மோதலில் 5 பேருக்கு மண்டை உடைந்தது. மோதலில் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.