தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு

108

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில், நவம்பர் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.