நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணம் ?

266
Advertisement

டார்லிங் ,மரகதநாணயம், யாகாவராயினும் நாகாக்க, போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நிக்கி கல்ராணி. கடந்த சில வருடங்களாக நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் கசிகின்றன .மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் இருவரும் ஒன்றாக நடித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

விரைவில் ஆதியும், நிக்கிகல்ராணியும் தங்களது திருமணத்தை அறிவிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரவான் மற்றும் ஆடுபுலி உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கேரக்டர்ரில் ஆதி நடித்துள்ளார்.